திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலையில், சிவன் கோவில் புணரமைக்கும் பணியின் போது, பூமிக்கு அடியில், பானையில் இருந்து 103 மன்னர் காலத்து தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை பகுதிக்கு உட்பட்ட கோவில் கிராமத்தில் ஆதிஜீவன் ஆலயம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அரசின் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு புனரமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கோவில் புனரமைக்கும் கட்டுமான பணியின் போது கோவில் பணியாளர்கள் பூமி வேலையில் தோண்டும் வேலை ஈடுபட்டுள்ளார்கள். அப்போது மண்பானையில் சுமார் 103 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த கோவில் பணியாளர்கள் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கும், காவலருக்கும் தகவல் அளித்துள்ளார்கள். தகவலின் பெயரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த பானையில் கண்டெடுக்கப்பட்ட 103 நாணயங்களை கண்டறிந்து அவை தங்க நாணயங்களா? அல்லது மன்னர் காலத்து வேறு ஏதாவது நாணயங்களா என்று ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது இன்று பிரதோஷம் என்பதால் இந்த கோவில் புனரமைப்பு பணியின் போது இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இது குறித்து அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னரே இது மன்னர் காலத்து நாணயங்களா என்பது குறித்து முழு விவரங்கள் நமக்கு தெரியவரும்.






