
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை முழுவதும் கழிவு துணிகள் நிறைந்து குப்பை கூலமாக காட்சி அளிப்பதால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக பக்தர்கள் அளிக்கக்கூடிய புகார் என்னவாக இருக்கிறது. குப்பைக் கூலமான திருச்செந்தூர் கோவில் கடற்கரை உடனடியாக குப்பை மற்றும் கழிவு துணிகளை தூய்மைப்படுத்துதல் வேண்டும்.என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஏரளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் உடம்ப தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உடனே வந்து தரிசனம் செய்கின்ற நிலையில் தற்பொழுது கடற்கரை முழுவதும் கழிவு துணிகளால் நிறைந்து உள்ளது.
மேலும் கடலுக்குள் அதிக அளவு துணிகள் கிடப்பதால் கோவில் முன்பு உள்ள கடலில் நீராடும் பக்தர்கள் முகசூழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடலில் கிடக்கும் துணிகளை கடலில் புனித நீராடும்போது பக்தர்கள் மேல் விழுவது மற்றும் முகத்தில் விழுவதுமாக உள்ளது.
இதனால் பெரும் ஆபத்து ஏற்படும் நிலைமை உள்ளது. எனவே கடல்கறையில் கிடக்கும் கழிவு துணிகள் மற்றும் பொருட்களை உடனடியாக அப்பரப்படுத்த வேண்டும். மேலும் கடலில் துணிகளை போடுவதற்கு தடைவிதிக்க கோரியும், அறிவிப்பு பலகை வைக்கவும் . கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோல் தொடர்ந்து கழிவு துணிகளை போடுபவர்களை கண்டறிந்து அவதாரம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து நிர்வாகத்தில் விளக்கம் கேட்டபோது தினந்தோறும் பணியாளர் வைத்து இதை அப்புறப்படுத்தும் பணிகளை நடந்து வருவதாக கூறுகிறார்கள்.




