Home தமிழகம் ரித்தன்யா வழக்கில் அதிர்ச்சி திருப்பம் – “செல்போனில் புதையுண்ட ஆடியோ சான்று?

ரித்தன்யா வழக்கில் அதிர்ச்சி திருப்பம் – “செல்போனில் புதையுண்ட ஆடியோ சான்று?

1
0

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரித்தன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ரித்தன்யாவின் செல்போன்களை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ரித்தன்யாவின் இரண்டு செல்போன்களை தடைவியல் சோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

ரித்தன்யாவின் இரண்டு செல்போன்களை சோதனை செய்ய காவல் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வந்து வரதட்சனை கொடுமை காரணமாக புதுமணப்பெண் ரித்தன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய கணவர் கவின் குமார் மற்றும் அவருடைய பெற்றோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழல்ல கவின் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில் ஜாமீன் பெற்று வீடு திரும்பிய போது வீட்டில் வந்து ரித்தன்யாவினுடைய இரண்டு மொபைல் போன்கள் கண்டெடுத்ததாகவும் அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தர வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது ரித்தன்யா உடைய இந்த இரண்டு மொபைல் போன்களும் ஆய்வு செய்ய காவல்துறையிடம் கூறியபோது அவர்கள் மறுத்துவிட்டதாகவும் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று தோழிகளிடம் ரித்தன்யா பேசிய விவரங்கள் வந்து போன்ல இருப்பதால் அந்த விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கவின்குமார் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதே சமயம் காவல்துறை தரப்பில் இந்த போன்களை புலன் விசாரணை அதிகாரிடம் ஒப்படைத்தால் அவை ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது இதை அடுத்து இரண்டு மொபைல் போன்களையும் தடையவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுருக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here