Home தமிழகம் தவெக தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நாளை மறுநாள் சந்திக்கிறார்!

தவெக தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நாளை மறுநாள் சந்திக்கிறார்!

1
0

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமலபுரத்தில் வைத்து விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், மூன்று நாட்கள் கழித்து தவெக தலைவர் விஜய் கரூர் துயரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டார்.

தொடர்ந்து வீடியோ காலில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். கடந்த 18 ஆம் தேதி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்கிற்கு தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை ₹20 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இன்றுவரை அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் சரியாக ஒரு மாதம் கழித்து நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்திக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சரியாக ஒரு மாதம் கழித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here