
தமிழ்நாட்டில் வடக்கிழக்கு பருவமழை முழு வீச்சில் தொடங்கி சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத தாழ்வு பகுதி அடுத்த நாட்களில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த புயலுக்கு மோந்தா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை தாய்லாந்து அரசு பரிந்துரைத்துள்ளது. தாய்லாந்து மொழியில் மோந்தா என்பது பெண்கள் பெயராக பயன்படுத்தப்படுகின்றது. மற்றும் மனமிக்க மலர் அல்லது அழகான பூ என்று பொருள் கொண்டது.
இயற்கையின் அழகு, மென்மை, மனம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் இந்த பெயர். புயலின் காரணமாக உருவாகும் இயற்கை நிகழ்வுகளையும் மறைமுகமாக குறிக்கும் வகையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த காற்றுழுத தாழ்வு நாளை வலுப்பெற்று. அடுத்த நாள் காலை புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. புயல் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவாக்கி மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வடகிழக்கு கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை தீவிரம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலோர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் நேரத்தில் காற்றின் வேகம் 50 முதல் 60 km வரை வீசும் எனவும். மழை காரணமாக வெப்பநிலை குறையக்கூடும்.
மேலும் நீர் நிலைகள் நிரம்பும் வாய்ப்பும் உள்ளது. மோந்தா புயல் இயற்கையின் அழகை குறிக்கும் பெயரை பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு இது மழை நன்மையா அல்லது வெள்ள பிரச்சனையா மாறுமா என்பதை அடுத்த சில நாட்களில் தெளிவாக காண முடியும்.




