
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தன்னுடைய தமிழ்நாடு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் என விஜய் தமிழ்நாடு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய விடுதலைக்கு பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதன் தொடர்ச்சியாக 1956
ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.
சென்னை மாகாணத்தின் பகுதிகளை கொண்டு தமிழ்நாடு உருவானது 2016 ஆம் ஆண்டு அரசாணை போடப்பட்டு அது தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்ட நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த நாள் நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கூறி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழ்நாடு நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும் தமிழ்நாடு என பெயர் சூட்ட காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவு கூறுவோம் அவர்களை என்னாலும் போற்றுவோம் என இந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்ற முக்கியமான கருவாக இந்த பதிவில் பதிவிட்டுருக்கிறார்.
தமிழின் பெருமையும், தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒழிக்கட்டும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துக்கள் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவருடைய தமிழ்நாடு நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.




