
சொந்த பயன்பாட்டிற்கான கார் உள்ளிட்ட வாகனங்களில் பணத்திற்காக பயணிகளை ஏற்றினால் 25,000 ரூபாய் அபராதம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சொந்த பயன்பாட்டு வாகனங்களை விதிகளை மீறி இயக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்துறை அறிவுறுத்திருக்கிறது.
இந்த தீபாவளியை முன்னிட்டு, ஏராளமான பொதுமக்கள் தற்போது வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி, எல்லோ போர்டு (Yellow Board) கொண்ட கார்களில் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்.
ஆனால், பலர் விதிகளை மீறி வெள்ளை போர்டு (White Board) கொண்ட தனிப்பட்ட வாகனங்களை பயணிகள் வாகனங்களாக (Passenger Vehicle) அல்லது டாக்ஸியாக இயக்கி வருகிறார்கள் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன் அடிப்படையில பல்வேறு பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து தற்போது அதனை போக்குவரத்து வட்டார அலுவலர்கள் தற்போது ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில ஒயிட் போர்ட்ல வந்து தற்போது பயணிகள் பயணம் செய்தால் 25000 ரூபாய் வரைக்கும் தற்போது அபராதம் விதிப்பதற்கு
போக்குவரத்துறை முடிவு செய்திருக்கிறது.
எனவே பொதுமக்கள் இதே போன்று விபத்துக்கள் ஏற்பட்டாலும் அவர்களுக்கான அந்த இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் அதேபோல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கும் எனவே தற்போது அதிகாரப்பூர்வமாக எல்லோ போர்டில் மட்டும் பயணிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறார்கள் சொந்த ஊருகளுக்கு செல்லக்கூடியவர்கள் வாடகை வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது





