
வேலூர் மாநகர் காங்கேயநல்லூர் பகுதியில் இங்கி வரும் மிராக்கிள் நர்சரி தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. வேலூர் மாநகர் காட்பாடி அடுத்த இந்த காங்கேயை நல்லூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தரைத்தளத்தில் மிராக்கில் என்ற தனியார் பிளே ஸ்கூலும் ,முதல் தளத்தில் தனியாருக்கு சொந்தமான திருமுருகன் ரியல் எஸ்டேட் அலுவலகமும் இயங்கி வருகிறது.
அந்த முதல் மாடியில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமுருகன் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு ஏசி வெடித்து தீ விபத்தானது ஏற்பட்டிருக்கிறது.
இந்த விபத்தின் காரணமாக முதல் மாடி முழுவதுமாக ரியல் எஸ்டேட் இயங்கக்கூடிய முதல் மாடி முழுவதுமாக தீ பற்றி எறிந்து வரக்கூடிய நிலையில் அதனை அணைக்கும் பணியில் காட்பாடி தீயணைப்பு துறையினர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீயை மும்மரமாக அணைத்து வருகிறார்கள்.
முதல் மாடியில் தீ பற்றியதை அறிந்தவுடன் கீழ்த்தளத்தில் சிறுவர் பள்ளி அதாவது பிளே ஸ்கூல் இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படித்து வந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள்.
இதனால் இந்த விபத்தில் கீழ்த்தளத்தில் உள்ள பள்ளிக்கோ பள்ளியில் பயின்ற குழந்தைகளுக்கோ எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அவர்கள் பத்திரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இந்த தீவிபத்து குறித்து விருதம்பட்டு காவல் துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.




