
கல்லூரி மாணவர்களிடையே விவசாயத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் நாமக்களில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி கல்லூரிகளில் வேளாண் படிப்பை முடித்த பின்னர் 90% மாணவர்கள் விவசாயம் செய்யவே ஆர்வம் காட்டுவதில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.
ஏனென்றால் வேளாண்மையில் செலவுகள் அதிகரித்து விட்டதால் லாபமே இல்லாத விவசாயம் எதற்கு என்று கல நிலவரம் யோசிக்க வைக்கிறது. இந்த கல நிலவரத்தை மாற்றி அமைத்து விவசாயத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் நாமக்கல்லில் பசுமை கருத்தரங்கம் மற்றும் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
வேளான் தொழில்நுட்பங்கள் பயிர் வளர்ப்பு முறைகள் இயந்திரங்கள் பண்ணை பராமரிப்பு உணவு பதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேலும் கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு மரபு விதைகள், காய்கறிகள், மூலிகை பயிர்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவை காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் சிறப்பம்சமாக முரசு, பறை, தப்பட்டை, தப்பு, கொம்பு, மத்தளம், பேரிகை, திமிலை, நாதஸ்வரம், தவில், உருமி, பம்பை, தமுக்கு, மிருதங்கம், எக்காலம், சங்கு, மகுடி, யாழ் உள்ளிட்ட பாரம்பரிய இசை கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை கண்டு மாணவர்கள் பிரம்மிப்பு அடைந்தனர்.
இந்த பசுமை கருத்தரங்கில் விளைச்சல் அதிகரிக்கவும் விற்பனை வாய்ப்புகளை கண்டறியவும் விரிவான தொழில்நுட்ப தகவல்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பாடத்திட்டத்தில் படித்ததை நேரடியாக பார்த்து தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்த இந்த கண்காட்சி. எதிர்காலத்தில் இயற்கை விவசாயம் செய்வதற்கான ஆர்வத்தை தூண்டி இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.




