
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாளை மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கக்கூடிய பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இன்று ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை காலை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து ஒரு சுமூகமான ஒரு தீர்வை எட்டுவதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டார்.
அந்த இருதரப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனர் மருத்துவர் ஐயா அவர்களிடம் அவருடைய அந்த பிசி வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நேரடியாகவும் சந்தித்து பேசினார்கள்.
அதற்குப்பிறகு அதில் என்ன பேசினார்கள் இருவரும் என்ன நடந்தது என்பது அவர்கள் மூவருக்கு மட்டும் தான் தெரியும். அதற்குப் பிறகு இந்த வழக்கினுடைய விசாரணையை எடுத்துக் கொள்வதாக கூறி அரசு தரப்பில் மனுதார தரப்பில் எங்கள் தரப்பில் நாங்கள் எல்லோரும் ஆஜரானோம்.
மூன்று தரப்பினுடைய வாதங்களையும் கேட்ட பிறகு இப்பொழுது நீதியரசர் அவர்கள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுருக்கிறார்.
நாளை அதன் மூலமாக திட்டமிட்டபடி பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பொதுக்குழு என்பது நாளை நடைபெறும். தமிழகத்தினுடைய பல்வேறு பகுதிகளில்ிருந்து வரக்கூடிய தொண்டர்கள் இன்றிலிருந்தே அவர்கள் புறப்பட தயாராக இருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் நாளை நடைபெறக்கூடிய பொதுக்குழுவிற்கு எந்த தடையும் இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வழக்கை பொறுத்தவரையில் நீதியரசர் அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து ஏதாவது ஒரு நல்ல இணக்கமான சூழலை ஏற்படுத்தலாம் என்ற அவர் எடுத்த முயற்சிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அந்த முயற்சி ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முயற்சி.
ஆனாலும் அதையும் தாண்டி இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார். நான் பல்வேறு இதுபோன்ற வழக்குகளில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
ஆனால் இன்றைக்கு இந்த வழக்கில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட எங்களுக்கு அது ஒரு பெரிய வெற்றியாகவோ அல்லது ஒரு கொண்டாட்டமாக எங்களால் அதை பார்க்க முடியவில்லை.
காரணம் இந்த பொதுக்குழுவை நிறுத்த வேண்டும். இந்த பொதுக்குழு நடக்க கூடாது என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பது எங்களுக்கெல்லாம் பெரும் கவலை. அதன் மூலமாக நாளை பொதுக்குழு நடப்பது என்பது உறுதியாக இன்று நீதிபதி அவர்களால்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் இந்த தீர்ப்பினுடைய விவரத்தை தெரிவித்திருக்கிறோம். ஒட்டுமொத்த பாட்டாளி மக்கள் கட்சியினுடைய அனைத்து நிலை நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒரு பெரும் மகிழ்ச்சியில் இன்றைக்கு இருக்கிறார்கள். அடுத்து வரக்கூடிய தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வதற்கு மற்றும் ஆலோசனை செய்வதற்கான பொதுக்குழுவாக நடக்கிறது.




