
தொழில் நுட்பத்தின் உச்சமாய் வளர்ந்து வரும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் உங்க பணத்துக்கும் உங்கள் சேமிப்புக்கும் ஆபத்தா முடியுமா? இந்த அதி முக்கிய கேள்வி எழுப்பி இருக்கிறார் நமது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி ரபி சங்கர். சமீபத்தில ஒரு நிகழ்ச்சியில பேசினவர் நிதித்துறையில ஏஜ யின் இரட்டை பங்கு பற்றி விளக்கி இருக்கார்.
ஏஐ நிதி சேவைகளை இன்னும் திறமையாக்கும். புதுமைகளை உருவாக்கும். பின்தங்கிய மக்களுக்கும் நிதி வசதிகளை கொண்டு சேர்க்கும் என்பதில சந்தேகம் இல்லை. ஆனா இந்த ஏஐ சரியான மேற்பார்வை இல்லாம பயன்படுத்தினார்.
இது முன்னெல்லா அபாயங்களை ஏற்படுத்தும்னு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கார். நிதித்துறையின் நம்பிக்கை என்கிற அடித்தளத்தில கட்டப்பட்டது. இங்க ஒரு சின்ன தவறு நடந்தா கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஏஐ இருக்கக்கூடிய அல்காரிதமிக் சார்பு. வெளிப்படை தன்மை இல்லாத பிளாக் பாக்ஸ் சிக்கல் . ஏஐ மூலமா நடக்கிற வர்த்தகத்தால சந்தை ஏற்றத்தாழ்வுகள் பாகுபாடு என பல அச்சுறுத்தல்கள் இருக்கு. இது உங்களோட பணம், சேமிப்பு எல்லாத்தையுமே பாதிக்கலாம். வேலை வாய்ப்புகளை கூட இது கேள்விக்குறியாக்கலாம்னு ரிசர்வ் வங்கி அதிகாரி கவலை தெரிவிச்சிருக்காரு.
ஆனா இந்த அபாயங்களை தடுக்க வடிவமைப்பு மூலம் பாதுகாப்பு அவசியம்னு அவர் அழுத்தமா சொல்லிருக்கார். அதாவது ஏஐ சிஸ்டம்களை உருவாக்கும் போதே அதுல பாதுகாப்பு அம்சங்கள் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை உறுதி செய்யணும்.
ரிசர்வ் வங்கி கூட மோசடிகளை கண்டுபிடிக்க மியூல் ஹண்டர் ஏஐ போன்ற ஏஐ கருவிகளை வெற்றிகரமா பயன்படுத்திட்டு வருது. நம்பிக்கை நெறிமுறைகள் சரியான பயிற்சி நல்ல நோக்கத்துக்காக தொழிநூட்பத்தை பயன்படுத்துறது மற்றும் ஒற்றுமையுடன் செயல்படுவதுன்னு ஏஐ பாதுகாப்பு நிதித்துறையில இணைப்பதற்கான அஞ்சுமுக்கியமான தூண்களையும் அவர் கோடிட்டு காட்டி இருக்கார்.
புதுமைகளை வரவேற்கும் அதே வேளையில புதிய அச்சுறுத்தல்கள் உருவாகிடாம பார்த்துக்கிறது நம்மளுடைய கடமை. ஏஐ ஒரு சக்தி வாய்ந்த கருவி. அதை பொறுப்போடு பயன்படுத்தும் போது அது நிச்சயம் நமக்கு ஒரு வரப்பிரசாதமா இருக்கும்.






