
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி காலமானார். அவருக்கு வயது 83. தேமுதீக்க நிறுவனர் விஜயகாந்தின் மாமியாரும் பிரேமலதாவின் தாயாருமான அம்சவேணி தனது மகன் எல். கே சுதீஷி உடன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார்.
வயது மூப்பின் காரணமாக இன்று காலை அவர் காலமானார். அம்சவேணி அம்மாளின் உடல் உறவினர்கள்,தேமுதிக காரர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் அஞ்சலிக்காக எல் .கே சுதீஷின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு வடபழனி ஏவி.எம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.






