
உலகின் மகிழ்ச்சியான நாடாக அறியப்படும் பின்லாந்து இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமையை வழங்க தயாராக உள்ளது. அமெரிக்கா ஏற்கனவே இந்தியர்களுக்கான ஹச்ஒன்விசா கனவை கிட்டத்தட்ட தகர்த்த நிலையில் பின்லாந்து செல்ல என்ன தகுதி வேண்டும்? யார் யார் விண்ணப்பிக்கலாம்
வேர்ல்ட் ஹாப்பினஸ் அறிக்கையில் உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்த தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதன் உயர்தர வாழ்க்கை வழுவான சமூக நல அமைப்பு மற்றும் இயற்கை நிலபரப்புகள் மூலம் உலகலாவிய திறமையாளர்களை தொடர்ந்து ஈர்த்தும் வருகிறது.
இந்திய குடிமக்களுக்கு இந்த நாட்டில் பர்மனன்ட் ரெசிடன்சி பெறுவது என்பது காலவரையற்ற வாழ்க்கை மற்றும் வேலை செய்யும் உரிமைகளோடு குடியுரிமைக்கான நுழைவாயிலையும் குறிக்கிறது.
2025ஆம் ஆண்டில் சமீபத்திய இமிக்கிரேஷன் தொடர்பான புதுப்பிப்புகள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத திறமையான தொழிலாளர்களுக்கான பாதைகளை மேம்படுத்தியுள்ளன. இது ஐடி, சுகாதாரம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு மத்தியில் பின்லாந்தை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளது.
பின்லாந்தில் பெர்மனன்ட் ரெசிடன்சி ஆனது இந்தியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத குடிமக்கள் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய பொதுசேவைகளை அணுகும் அதே வேளையில் காலவரையின்றி நாட்டில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.
டெம்பரரி ரெசிடென்ட் பெர்மிட் போல் இல்லாமல் பெர்மனன்ட் ரெசிடென்சி காலாவதி ஆகாது. இருப்பினும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பிக்கப்பட வேண்டும். பெர்மனன்ட் ரெசிடென்சி என்பது சிட்டிசன்ஷிப்பிலிருந்து வேறுபடுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பின்லாந்து குடியுரிமையை பெறுவதற்கு மொழிப்புலமை மற்றும் நீண்ட கால தொடர்ச்சியான வசிப்பிடம் அதாவது பொதுவாக எட்டு ஆண்டுகள் இருத்தல் போன்ற கூடுதல் அளவுகோள்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
யார் விண்ணப்பிக்கலாம் இந்தியர்களுக்கு தகுதி வரம்புகள் என்ன என்று பார்க்கும்போது பின்லாந்தில் நுழைந்த தேதி அல்லது அனுமதி வழங்கப்பட்டதில் இருந்து தொடங்கி நான்கு ஆண்டுகள் தொடர்ந்து அங்கு வசித்திருக்க வேண்டும்.
குறுகிய கால வேலைக்காக வழங்கப்படும் வகை பி அதாவது தற்காலிக அனுமதி பத்திரங்களில் செலவிடும் நேரம் இந்த காலகட்டத்தில் கணக்கிடப்படாது. கூடுதலாக இந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீங்கள் பின்லாந்தில் வசித்திருக்க வேண்டும்.
விடுமுறை அல்லது வெளிநாட்டில் வேலை குறித்து முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கவும் வேண்டும். பெர்மனன்ட் ரெசிடென்சிக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு ,குடும்ப உறவுகள் போன்ற உங்கள் தற்காலிக அனுமதிக்கான அடிப்படையும் இருக்க வேண்டும்.
இந்த பர்மனன்ட் ரெசிடன்ஸ் மாணவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் கிடைக்காது. பிஆர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் நீங்கள் முதலில் ஏ வகை வேலை அல்லது குடும்ப அடிப்படையிலான அனுமதிக்கு மாற வேண்டும். குறைந்தபட்ச ஆண்டு வருமானம் சுமார் 41.35 லட்சமாக அல்லது பின்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் முதுகலை பட்டம் மற்றும் கூடவே இரண்டு வருட பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
ஃபின்னிஷ் அல்லது ஸ்வீடிஷ் மொழிகளில் சிஒன் நிலை புலமையை மூன்று வருட பணிஅனுபவத்துடன் நிரூபிப்பதும், தகுதியை மேலும் வழுபடுத்தும். தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று பார்க்கும்போது விண்ணப்பதாரர்கள் குற்றப்பதிவு இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்தியாவில்லிருந்து காவல்துறை அனுமதி இது குறித்தாக பெற்றிருக்கவும் வேண்டும். செல்லுபடியாகும் சுகாதார காப்பீடு மற்றும் தங்கும் இட சான்று இருக்க வேண்டும். பாஸ்போர்ட் வேலை ஒப்பந்தம் சம்பளச் சான்று சான்றுதல்களும் தேவைப்படும்.
முழுமையற்றஆவணங்கள் காரணமாக நிராகரிப்புகள் ஏற்பட்டால் தோராயமாக 260 யூஆர் கட்டணத்தில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடும் செய்யலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை தேட மூன்று மாத கால அவகாசம் பொருந்தும். இதனுடன் சில சவால்களுமே இருக்கும். குறிப்பாக குளிர்ந்த காலநிலை, மொழித்தடைகள் ஒட்டுமொத்த அதிக வாழ்க்கை செலவுகள் ஆகியவை சில சவால்களாகவும் பார்க்கப்படுகிறது.





