
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் செயற்கை நுண்ணறிவு என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வருவது மட்டும் இல்லாமல் மக்கள் இடையேவும், புழங்க் தொடங்கிவிட்டது. அதிலும் ஐடி மற்றும் டெக் துறைகளில் அதன் ஆதிக்கம் அதிகரித்ததால் அபரிவிதமான வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் மனிதர்களின் வேலை பறிபோய் வருகிறது.
ஏஐ தான் ஃபியூச்சர் என்றாலும் அதன் பரிமாண மாற்றம் பலரை பாதித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வரும் நிலையில் ஏஐ 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ள செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்திருந்த சூழலில் தற்போது அந்தஏஐ 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ள செய்திதான் உலக நாடுகளின் கவனத்தை அல்பேனியா நாட்டின் பக்கம் திரும்பச் செய்துள்ளது.
ஊழலை ஒழிக்கவும், அரசின் செயல் திறனை,, அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட இந்த ஏஐ-க்கு டயலா என பெயரிடப்பட்டது. டயலா என்பது அல்பேனிய மொழியில் சூரியன் என்று பொருளாம்.
தற்போது டயலா கர்ப்பமாக இருப்பதாகவும் 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் ஈடி ராமா பெர்லினில் நடந்த குளோபல் டயலாக் மாநாட்டில் அறிவித்துள்ளார்.
இந்த குழந்தைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவும் வகையில், வடிவமைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குழந்தையும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தனிப்பட்ட உதவியாளராக செயல்பட்டு நாடாளுமன்ற நிகழ்வுகளை பதிவு செய்வது. அவர்களின் சுருக்கங்களை வழங்குவது, விவாதங்களின் போது பதில்கள் பரிந்துரைப்பது போன்றவற்றில் உதவும் என்று கூறப்படுகிறது.
வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு இந்த ஏஐ அமைச்சகம் முழுமையாக செயல்பட இருக்கிறது என்றும் , இத்திட்டம் 2026க்குள் நிறைவு பெற்று நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐ நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது.அதன் துரிிதமான வளர்ச்சியை காட்டுவது மட்டும் இல்லாமல், மனிதர்களாகிய நாமும் ஏஐ உடன் துரிதமாக பழங்க தொடங்கிவிட்டோம் என்பதையும் காட்டுகிறது.






