
பிஜி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கால் டாக்ஸி ஓட்டி அதில் சம்பாதிக்கும் பணத்தை இந்திய மாணவிகளுக்கு அனுப்பி வருகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் நவஷா பிஜி நாட்டில் டாக்ஸியில் சென்றபோது அதன் ஓட்டுனரிடம் உரையாடி உள்ளார். அப்போது 86 வயதான அந்த ஓட்டுனர் தான் ஒரு செய்தித்தாள், 13 நகைக்கடைகள் உள்ளிட்டவற்றை நடத்தி வருவதாகவும், ஆண்டுக்கு 175 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
டாக்ஸி ஓட்டுவதன் மூலம் வருமானத்தை கொண்டு வருடம் தோறும் 24 இந்திய மாணவிகளுக்கு உதவுவதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து நவஷா வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.






