அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய உத்தரவு அங்குள்ள இந்திய பணியாளர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கான பணி உரிமத்தை நீட்டித்துக் கொள்ளும் நடைமுறையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கு முன் பணி உரிமங்கள் தானாகவே நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் அனுப்பி அது பரிசீலிக்கப்பட்டு பின்பே நீட்டிப்பு கிடைக்கும் நிலை உள்ளது.
இந்த உரிமம் கிடைப்பது தாமதமானாலோ அல்லது மறுக்கப்பட்டாலோ இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.






