
அதிகரித்து வரும் கடல் மட்டத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து காரணமாக பசிபிக் தீவு நாடான துவாலுவில் வசிக்கும் குடிமக்களுக்கு காலநிலை விசா வழங்க ஆஸ்திரேலியா முன் வந்துள்ளது.
10,000 மக்கள் தொகை கொண்ட தீவில் 8750 பேர் புதிய விசா திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய தூதரகம் தெரிவித்தது.
2024 ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இந்த முயற்சி உலகில் இதுவரை இல்லாத முதல் திட்டமாகும் என்று கூறியுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் மோசமாகும் போது கண்ணியத்துடன் இடம் பெயர்வதற்கான ஒரு வழியை துவாலு மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தது.






