முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்திருக்கிறது. இந்நிலையில் தங்கள் நாட்டிற்கு கொசுக்கள் நுழைந்தது எப்படி என்ற ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரேக்ஜாவக்கருகே ஜோஸ் என்ற பகுதியில் மூன்று கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பூச்சியியல் வல்லுனர் மத்தியாஸ் ஆல்பரடஸ் குலிசெட்டா அன்லேட்டா வகையை சேர்ந்த இந்த கொசுக்கள் இரண்டு பெண் என்றும் ஒரு ஆண் எனவும் தகவலானது கிடைக்க பெற்றிருக்கிறது.
அண்டார்டிக்காவுடன் சேர்த்து, கொசுக்கள் இல்லாத நாடாக விளங்கி வந்த ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தங்கள் நாட்டிற்கு கொசுக்கள் நுழைந்தது எப்படி என்ற ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சமீபத்தில் வந்த கப்பல்கள் அல்லது சரக்கு பெட்டகங்கள் வழியாக ஐஸ்லாந்திற்குள் கொசுக்கள் நுழைந்திருக்கலாம் என தகவலானது வெளியாகி இருக்கிறது. எளிதில் கடும் குளிரை தாக்கு பிடிக்கும் இந்த கொசுக்கள் எப்படி நாட்டுக்குள் வந்தது என்பது பற்றி தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை 20°செல்சியஸை சந்தித்திராத ஐஸ்லாந்தில் நடப்ப ஆண்டில் 20°செல்சியஸை கடந்து வெப்பம் பதிவானது. வெப்பம் அதிகரிப்பால் பனிப்பாறைகள் உருக காரணமானது என்றும், இதுவே கொசு உற்பத்தியாக காரணமாக இருக்கலாம் எனவும் தகவலானது வெளியாகி இருக்கிறது.
ஜோஸ் என்ற பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் கொசுக்கள் இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. கொசுக்கள் எண்ணிக்கையில் இன்னும் அதிகமாக ஐஸ்லாந்தில் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
ஐஸ்லாந்தில் நிலவும் நடுக்கும் குளிரும் ,தேங்கிய நீர்நிலைகள் இல்லாத சூழலுமே ,அங்கு கொசுக்கள் இல்லாமல் இருந்ததற்கு காரணமாக இருந்தது. இந்நிலையில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கொசுக்கள் நுழைய காரணமாக இருந்திருக்கலாம் என தகவலானது வெளியாகி இருக்கிறது.
இந்த உலகில் கொசுக்கள் இல்லாத ஒரே பகுதியாக அண்டார்டிகா கண்டம் அறியப்படும் நிலையில் தற்பொழுது ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.






