
அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில், சாட்பாட்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைத் தடுப்பதற்காக “செனட் பில் 243” என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு காலிபோர்னியா ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.
இச்சட்டத்தின் நோக்கம், குழந்தைகள் சாட்பாட்களை பயன்படுத்தும் போது அவர்கள் தற்கொலை எண்ணம் போன்ற மனநல பிரச்சனைகளில் சிக்கியிருந்தால், அதைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கச் செய்வது.
மேலும், OpenAI-யின் ChatGPT போன்ற சாட்பாட்களை வழங்கும் நிறுவனங்கள், குழந்தைகளுக்கு மனநல உதவி தொடர்பான சரியான தகவல்களை வழங்க வேண்டும் என்றும், அவர்கள் பெறும் பதில்கள் பொய்யானவையாகவோ அல்லது வழுவானவையாகவோ இருக்கக்கூடும் என்பதை நினைவூட்டும் எச்சரிக்கை செய்திகள் அடிக்கடி காட்டப்பட வேண்டும் என்றும் சட்டம் வலியுறுத்துகிறது.
இருப்பினும், டெக் ஓவர்சைட் மற்றும் காமன் சென்ஸ் மீடியா போன்ற குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், “செனட் பில் 243” சட்டத்தில் சில முக்கியமான கட்டுப்பாடுகள் தளர்வாக உள்ளன என்று விமர்சித்துள்ளன. நியமனங்கள் இன்றி இயங்கும் தொழில்நுட்பங்கள் குழந்தைகளுக்கு பேரழிவாக மாறக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.






