
இந்தியா இலங்கை இடையேயான மீனவர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் டெல்லியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது பேசியவர் உலக அளவில் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்திற்கு இலங்கை துறைமுகங்கள் எப்போதும் சாதகமான நுழைவு வாயிலாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.
இந்திய பெருங்கடல் பாதுகாப்பு எரிசக்தி துறை உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை தொடரும் என்றார். உலகளவில் நிலவும் பொதுவான சவால்களுக்கு ஒருங்கிணைந்து செயல்பாடுகள் அவசியம் என்று தெரிவித்தார்.
இந்தியா இலங்கை இடையேயான மீனவர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.






