
மும்பை வருகை தந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.இரண்டு நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் நேற்று இந்தியா வந்திருந்தார். தற்போது மும்பையில் உள்ள ராஜ் பவனில் பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமரும் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் .
ராஜ் பவனுக்கு வந்த இங்கிலாந்து பிரதமரை, பிரதமர் மோடி வாசலுக்கு வந்து வரவேற்று அழைத்துச் சென்றார் குறிப்பாக அண்மையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது, நீண்ட பேச்சு வார்த்தை முயற்சிக்கு பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது .
இதன் காரணமாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற பல உணவு பொருட்கள் ,ஜவுளி பொருட்கள், இரத்தினங்கள் ஆகியவற்றின் மீதான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது இதனால் இங்கிருந்து அங்கு செய்யப்படுகின்ற ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது அதேபோல அங்கிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்ற சில பொருட்களுக்கான வரியும் குறைக்கப்பட்டிருக்கிறது
இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர் இது தவிர செயற்கை நுண்ணறிவு,தொழில்நுட்பம், தொலை தொடர்பு, ராணுவம், கல்வி, சுகாதாரம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் பேச்சு வார்த்தைகளை நடத்த இருக்கின்றன.
இதனை தொடர்ந்து இன்று மதியம் ஜியோ வர்த்தக மையத்தில் நடைபெறுகின்ற சிஇஓ அரங்கிலும் இரு தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்ற பிறகு இந்தியாவுடனான உறவுக்கும், இந்த வர்த்தக உறவுக்கும் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறார்.
அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இவரை இந்தியா வருவது இதுவே முதன்முறை என்கிற அடிப்படையில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த சந்திப்பின் முடிவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






