நாம எல்லோரும் 2025ல வாழ்ந்துட்டு இருக்கோம். ஆனா உலகத்துல ஒரு நாடு இன்னும் 2017ல தான் இருக்காங்கன்னா நம்புவீங்களா? அவங்களுக்கு ஒரு வருடத்திற்கு 12 மாதம் இல்ல 13 மாதம். அவங்களோட புத்தாண்டு ஜனவரி 1 – ஆம் தேதியும் கிடையாது. இது ஏதோ கதை இல்லை இது ஒரு நிஜமான நாடு.
அது எந்த நாடு? இந்த டைம் டிராவல் மேஜிக் எப்படி சாத்தியம்? வாங்க அந்த அதிசிய உலகத்துக்குள்ள போகலாம். அந்த அதிசிய நாடுதான் ஆப்பிரிக்காவில உள்ள எத்தியோப்பியா. நாம எல்லோரும் பயன்படுத்துறது கிரிகோரியன் காலண்டர். ஆனா எத்தியோப்பியா மக்கள் பயன்படுத்துறது அவங்களோட பழமையான கீஸ் காலண்டர்.
இந்த இரண்டு காலண்டருக்கும் நடுவுல இயேசுவோட பிறப்பை கணக்கிடுறதுல இருக்கிற ஒரு சின்ன வித்தியாசம்தான் இந்த ஏழு முதல் எட்டு வருட இடைவெளிக்கு காரணம். இதனால உலகம் 2025ல இருக்கும் பொழுது அவங்க காலண்டர் 2017 ல ஓடிக்கிட்டு இருக்கு. அவங்களுக்கு ஒரு வருடத்திற்கு 12 மாதத்திற்கு 30 நாட்கள். கடைசி 13வது மாதத்திற்கு மட்டும் ஐந்து முதல் ஆறு நாட்கள் இருக்கும்.
அவங்களோட புத்தாண்டு நம்ம ஜனவரில கொண்டாடுற மாதிரி இல்ல. செப்டம்பர் 11 ஆம் தேதி அவங்களுக்கு புத்தாண்டு. அதாவது நகைகளின் பரிசு அப்படிங்கிற ஒரு பெயர்லதான் புத்தாண்டை கொண்டாடுறாங்க. அது மட்டுமல்ல அவங்களோட கடிகாரமும் ரொம்பவே வித்தியாசமானது.
நமக்கு ராத்திரி 12 மணிக்கு நாள் தொடங்கும் அப்படின்னா அவங்களுக்கு காலையில 6 மணிக்கு தான் ஒரு புது நாள் தொடங்குமாம். இன்னொரு பெருமையான விஷயம் ஆப்பிரிக்காவிலேயே எந்த ஒரு ஐரோப்பிய நாட்டுக்கும் அடிமையாகாம காலணி ஆதிக்கத்தில சிக்காத ஒரே நாடு எத்தியோபியாதான்.
இப்படி தனக்கே உரிய காலண்டர், நேரம், கலாச்சாரம், வரலாறுன்னு ஒரு பெரிய உலகமே எத்தியோப்பியா கிட்ட இருக்கு.






