
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோகரான் மம்தானி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தனது வெற்றி உரையில் இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஜவஹர்லால் நேரு கூறிய வரலாற்றில் அரிதாகக் காணப்படும் ஒரு உரையை மம்தானி மேற்கோள் காட்டினார். அவர்,
“இது நாம் பழையதிலிருந்து புதியதற்கு அடியெடுத்து வைக்கும் தருணம்; நீண்ட காலமாக அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா வெளிப்படும் தருணம்,”
என்று நேருவின் உரையைச் சுட்டிக் கூறினார்.
மம்தானியின் இந்த உரை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.





