நாம இரவு பார்க்கும் அழகான நிலவுக்கு ஒரு இருண்ட பக்கம் இருக்கு அப்படின்றது நமக்கு தெரியும். பூமியில இருந்து எப்போதுமே மறைந்திருக்கும் அந்த மறுபக்கத்தை பத்தி. சீனாவின் ஷாங்கி சிக்ஸ் விண்கலம் ஒரு ஆச்சரியமான புதிய மர்மத்தை வெளி கொண்டு வந்திருக்கு.
ஆமாங்க நிலவினுடைய மறுப்பக்கம் நம்ம பார்க்கும் இந்த பக்கத்தை விட மிகவும் குளிரான உட்புறத்தை கொண்டிருக்கு அப்படின்னு. அந்த விண்கலம் கொண்டு வந்த மாதிரிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. இதன் நிலாவுடைய மேற் பரப்புல மட்டுமல்ல அதன் உள்ளேயும் ஆழமான வேறுபாடுகள் இருக்கதற்கான முதல் நேரடி ஆதாரமா பார்க்கப்படுது.
ஷாங்கி சிக்ஸ் விண்கலம் நிலவின் தென்துருவ ஹைட்கேன் படுகையில இருந்து பாறை மாதிரிகளை சேகரிச்சு பூமிக்கு கொண்டு வந்தது. இந்த மாதிரிகளை ஆய்வு செஞ்ச போது விஞ்ஞானிகள் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை கண்டுபிடிச்சிருக்காங்க. நிலாவுடைய மறுபக்கத்தில உருவான இந்த பாறைகளினுடைய வெப்பநிலை. நாம பார்க்கிற இந்த பக்கத்துல உருவான பாறைகளை விட சுமார் 180° பாரன்ஹீட் குறைவாக இருந்திருக்கு.
ஏன் இந்த மிகப்பெரிய வெப்ப வேறுபாடு அப்படின்னு பாத்தோம்னா இதுக்கு பின்னாடி பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பிரபஞ்ச நாடகம் இருக்கிறதா விஞ்ஞானிகள் சொல்றாங்க. நிலவு உருவான ஆரம்ப காலத்துல யுரேனியம், தோரியம், பொட்டாசியம் போன்ற வெப்பத்தை உருவாக்கும். கதிர இயக்க தனிமங்கள் சமமாக பரவி இருக்க. இந்த தனிமங்கள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்தினால நிலாவின் ஒரு பக்கத்துல அதாவது நம்ம பார்க்கற இந்த பக்கத்துல மட்டும் வந்து குவிந்திருக்கு.
இதனால நிலாவினுடைய இந்த பக்கம் மட்டும் பல கோடி ஆண்டுகளா அதிக வெப்பத்துடனும் எரிமலை செயல்பாடுகளுடன் இருந்திருக்கு. மறுபக்கமோ இந்த கதிரியக்க தனிமங்கள் இல்லாததுனால மிக விரைவாக குளிர்ந்து கடினமானதா மாறி இருக்கு.
இந்த வெப்ப வேறுபாடுதான் நிலாவினுடைய இரண்டு பக்கங்களின் தோற்றத்துக்கு காரணம். நாம பார்க்கிற இந்த பக்கம் எரிமலை குழம்புகளால சமதலமாக இருக்கு. ஆனா குளிரான மறுபக்கமும் எண்ணற்ற விண்கள் மோதல்களால கரடு முரடான மலைகளும் பள்ளங்களுமா காட்சி அளிக்குது.
இந்த தனிமங்கள் ஏன் ஒரு பக்கமா ஒதுங்கி இருக்கு? ஒரு மிகப்பெரிய விண்கள் மோதலா இல்ல பூமியின் ஈர்ப்பு விசையின் தாக்கமாலா போன்ற இந்த கேள்விகள் நிலாவினுடைய மிகப்பெரிய மர்மங்கள்ல ஒன்றா தொடர்ந்துகிட்டே இருக்கு. சீனாவினுடைய இந்த கண்டுபிடிப்பு அந்த மர்மத்தை அவிழப்பதற்கான ஒரு புதிய முக்கியமான துப்பை கொடுத்திருக்கு.






