இந்த ஆண்டுக்கான 2025-ஆம் ஆண்டின் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளன.முதலாவது நோபல் விருதாக, மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறையின் நோபல் பரிசு, புற்றுநோய் எதிர்ப்பு சக்தி (Immune Tolerance) தொடர்பான ஆராய்ச்சிக்காக வழங்கப்பட உள்ளது.
இந்த முக்கியமான கண்டுபிடிப்புக்காக, மொத்தம் மூன்று விஞ்ஞானிகள் — மேரி பர்கில், ராம்ல் ஷமோன், மற்றும் சக்குச்சி ஆகியோர் இணைந்து இந்த பெருமைக்குரிய விருதைப் பெற உள்ளனர்.
இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி, மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (Immune System) எவ்வாறு தன்னைத்தானே தாக்காமல், வெளிப்புற நோய்களை எதிர்க்கிறது என்பதைப் பற்றிய முக்கியமான புரிதலை அளித்துள்ளது.
இன்றைய தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் நாட்களில் இயற்பியல், இரசாயனவியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பிற துறைகளுக்கான நோபல் விருதுகளும் தொடர்ந்து அறிவிக்கப்பட உள்ளன.






