Home உலகம் “பவளப்பாறைகள் அழிந்தால்… கடலும் அழியும்”

“பவளப்பாறைகள் அழிந்தால்… கடலும் அழியும்”

2
0

நம்ம வாழற இந்த பூமி பல அதிசயங்களை தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் கடலுக்கு அடையில் இருக்கும் வண்ணமயமான உலகம். பவள பாறைகள். ஆனால் அந்த அழகான உலகம் இப்போ நம்ம கண் முன்னாலேயே செத்துக்கிட்டு இருக்கு.

விஞ்ஞானிகள் ஒரு அதிர்ச்சிகரமான எச்சரிக்கையை விடுத்திருக்காங்க. பூமி தனது முதல் காலநிலை திருப்பு முனையை கிளைமேட் டிப்பிங் பாயிண்ட்டை(Climate tipping point) கடந்து விட்டது அப்படின்னு சொல்றாங்க. அதாவது இனிமேல் சரி செய்யவே முடியாத ஒரு பேரழிவின் விழிம்புக்கு நாம வந்துவிட்டோம். இதுடைய முதல் வலி கடலுக்குள் இருக்கும் பவள பாறைகள் தான்.

என்ன நடக்குது? பூமியோட வெப்பநிலை அதிகமாக அதிகமாக கடலோட வெப்பமும் அதிகரிக்குது. இந்த வெப்பத்தை பவள பாறைகளால தாங்க முடிகிறது. அதனால அது தனக்குள்ள வாழு தனக்கு நிறத்தையும் உணவையும் கொடுக்கிற ஆல்கே என்ற உயிரினத்தை வெளியேற்றது.

இதனால அந்த வண்ணமையமான பவள பாறைகள் வெழுத்து எலும்பு கூடு மாதிரி மாறிடுது. இதுக்கு பேருதான் பவள பாறை விழுப்பு அதாவது கோரல் ப்ளீச்சிங்(Coral bleaching) அப்படின்னு சொல்லுவாங்க. இந்த நிலைமை நீடிச்சா அந்த பவள பாறைகள் முழுசா செத்து போயிடும். சமீபத்திய கணக்கெடுப்புடி உலகத்தில இருக்கிற
84% பவள பாறைகள் இந்த கொடூரமான வெழுப்பால் பாதிக்கப்பட்டிருக்கு.

இது ஒரு மிகப்பெரிய சுற்று சூழல் பேரழிவு. சரி பவள பாறை செத்தா நமக்கு என்ன? நம்மில் பலருக்கு தெரியாத ஒரு உண்மை இருக்கு. பவள பாறைகள்தான் கடலுடைய காடுகள். கடலில் வாழும் லட்சக்கணக்கான உயிரினங்களுக்கு இதுதான் வீடு. பலக்கோடி மக்களுக்கு இதுதான் வாழ்வாதாரம்.

கடலோர பகுதிகளை சுனாமி, புயல் போன்ற பேரடிவுகளில் இருந்து காப்பாத்தது இந்த பவள பாறைகள் தான். பவள பாறைகள் அழிந்தால் கடல் வளம் அழியும். மீன் வளம் குறையும். கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

விஞ்ஞானிகள் என்ன எச்சரிக்கிறாங்கன்னா இது வெறும் ஆரம்பம்தான். பவள பாறைகளை தொடர்ந்து பனிப்பாறைகள் உருகும். அமேசான் மழை காடுகள் அழியும். கடல் நீரோட்டங்கள் மாறும். இப்படி அடுத்தடுத்து பேரழிவுகள் சங்கிலி தொடர் போல நடக்கும்.

இது ஒரு தொலைதூர ஆபத்து இல்லை. இது இப்போ நம்ம கண் முன்னாடி நடந்துட்டு இருக்கு. இந்த அழிவை தடுக்க ஒரே வழி என்னன்னா நாம வளி மண்டலத்தில கலக்கும் கார்பன் அளவை குறைப்பதுதான். இந்த பூமி நமக்கானது மட்டும் கிடையாது. நம்மளுடைய அடுத்த தலைமுறைக்கும் சொந்தமானது. அதை நாமதான் காப்பாத்தணும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here