Home உலகம் பெண் பிரதமராக வரலாறு படைத்த சனே தகைச்சிக்கு இந்திய பிரதமர் மோடியின் பாராட்டு

பெண் பிரதமராக வரலாறு படைத்த சனே தகைச்சிக்கு இந்திய பிரதமர் மோடியின் பாராட்டு

4
0

ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சனே தகைச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஜப்பான் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சனே தகைச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜப்பானும்,இந்தியாவும் கட்டமைத்துள்ள சிறப்பு உலகளாவிய கூட்டாண்மையை மேலும் மேம்படுத்த நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.

இந்தோ பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை அடைவதற்கு வலுவான ஜப்பான் இந்தியா உறவு ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here