
பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில், சென்னை அருகிலுள்ள பல்லாவரத்தில் 2821 மாணவர்கள் மனித வடிவில் நின்று உலகச் சாதனை படைத்துள்ளனர்.
“பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் வெறும் ஒரு நிமிடம் 20 வினாடிகளில் மனித வடிவத்தை உருவாக்கி, தங்களின் ஒற்றுமையையும் சமூக பொறுப்பையும் வெளிப்படுத்தினர்.
இந்த சாதனை, ‘ஐன்ஸ்டீன் உலக சாதனைப் புத்தகத்தில்’ பதிவு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது ஒரு சாதனையாக மட்டும் இல்லாமல், எதிர்கால தலைமுறையாக விளங்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
உலகத்தை வடிவமைக்கும் ஆற்றல் கல்வியில்தான் இருப்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சமூக விழிப்புணர்வை ஊட்டும் தனித்துவமான முயற்சியாக பாராட்டப்படுகிறது.





