
பூமியை நெருங்கி வரும் விண்கள் பூமியில் குறுங்கோள் மோதும் அபாயம் என அவ்வப்பொழுது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வரிசையில் மீண்டும் ஒரு பரபரப்பை உருவாக்கி இருக்கிறது அப்போபஸ் என்ற குறுங்கோள்(Asteroid Apophis).
தற்போது பூமியில் இருந்து 27,000 கோடி km மீட்டர் தொலைவில் இருக்கும் அப்போபஸ் வருகின்ற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிக அருகில் வந்து பூமியை கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் பூமிக்கு ஏதாவது ஆபத்து உள்ளதா? விஞ்ஞானிகள் என்ன சொல்கின்றார்கள் என்பதை இப்போது பார்க்கலாம். பூமி தோன்றிய இந்த நான்கு பில்லியன் வருடங்களில் சூறாவளி, பெருமழை எரிமலை சீற்றம், அதனால் ஏற்படும் புவி அதிர்வு, அதனால் ஏற்படும் சுனாமி என பல இயற்கை பேரிடர்களை சந்தித்துள்ளது.
ஆனால் இவற்றைய எல்லாம் விட மிக மோசமாக நினைத்தே பார்க்க முடியாத பாதிப்புகளை பூமியில் மோதும் மின்கற்கள், எரிகற்கள் மற்றும் குறுங்கோள்கள் ஏற்படுத்தும். அவற்றைத்தான் விஞ்ஞானிகள் பேரழிவு என்று அழைக்கிறார்கள்.
சுமார் 340 மீட்டர் அகலம் இருக்கும் அப்போபஸ் சுற்றுவட்ட பாதை சூரியனை சுற்றும் நாட்கள் போன்றவை கணக்கிடப்படுவதில் பூமிக்கு மிக அருகில் இது கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அதாவது நாம் அனுப்பிய சில செயற்கை கோள்களை விட நெருக்கமாக கடந்து செல்லும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக 140 மீட்டர் விட்டம் கொண்ட எந்த ஒரு பொருள் பூமிக்கு அருகில் வந்தாலும் அது அபாயகரமான பொருளாக கருதப்படும்.
ஏனென்றால் புவியீர்ப்பு விசையால் அது உள்ளிழுக்கப்படக்கூடும். அப்படி இருக்க 340 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பொருள் பூமியை நெருங்குவது என்பது சற்று சவாலான விஷயம்தான். அதுவும் இது நான்கு புட்பால் ஸ்டேடியம் அளவுக்கு பெரியது.
பழங்காலத்து எகிப்திய கடவுளான குழப்பங்கள் மற்றும் இருளின் கடவுள் என்று அழைக்கப்பட்டு அப்போபிஸன் பெயர் இதற்கு சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்த குறுங்கோல் பூமியில் மோதினால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும் ,இது சுமார் 1200 மெகா டன் அணுகுண்டுக்கு சமமான ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கும் என்றும் ,சொல்லப்படுகிறது.
பொதுவாக பூமிக்கு தொடர்பற்ற பிற கோள்கள் போன்ற பொருட்களிடமிருந்து பூமியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், பகுப்பாய்வு கருவிகள் மூலமாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அதனுடைய நீளம் எவ்வளவு வேகம் எத்தனை தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது போன்றவையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அப்படி அப்போபேஸ் பூமியை தாக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் அதனை மாற்று பாதையில் திருப்பி விடுவது அல்லது விண்வெளியிலேயே வெடிக்க செய்வதற்கான சாத்திய கூறுகளையும் நாசா,இஸ்ரோ போன்ற அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன.
அதேபோல அப்போபஸ் பூமியை கடந்து செல்லும் பொழுது பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுருக்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.






