
உலகின் மிகப் பிரபலமான கிரிப்டோ நாணயமான பிட்காயின் ஒரு புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதன் விலை உயர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
பிட்காயின் விலை தற்போது 1,25,000 அமெரிக்க டாலர் என்ற புதிய சாதனையை எட்டி உள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் சுமார் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்த விலையால் கிரிப்டோ மார்க்கெட்டில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக கணிசமான விலை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த பிட்காயின் தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் உயர தொடங்கியுள்ளது. கிரிப்டோ சந்தையின் எதிர்காலம் குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் உறுதியாகி உள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பெரிய அளவிலான நிதி நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் ,பிட்காயினில் அதிக அளவில் முதலீடு செய்ய தொடங்கியிருப்பது மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. பங்கு சந்தை வளர்ச்சியும் அமெரிக்க டாலர் பலவீனம் அடைந்ததும் இந்த உயர்வுக்கு ஆதரவாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பிட்காயின் விலையானது புதிய உச்சத்தை எட்டி உள்ள நிலையில் உலகளவில் மட்டுமல்லாமல் இந்திய முதலீட்டாளர்களும் இதன் மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகின்றனர். ஏனினும் கிரிப்டோவில் முதலீடு செய்வதற்கு முன் அபாயங்கள் மற்றும் சந்தை மாற்றங்களை கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில் பிட்காயின் விலை சாதனை உயர்வை எட்டி உள்ள நிலையில் எதிர்காலத்தில் இது இன்னும் உயருமா அல்லது மீண்டும் சரிவா? என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்து உள்ளது. இதன் மூலம் சந்தை மாற்றங்களை கவனமாக கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.





