பிரிக்ஸ் (BRICS). இந்த பெயரை இப்போ அடிக்கடி கேட்கிறோம். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா அப்படின்னு ஆரம்பிச்ச இந்த கூட்டணி. இப்போ சவுதி அரேபியா, எகிப்த், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ன்னு பெருசா வளர்ந்து நிக்குது. இவங்க எல்லாரும் சேர்ந்து அமெரிக்க டாலருக்கு பதிலா ஒரு புது பொது நாணயத்தை கொண்டு வர போறாங்க அப்படின்னு ஒரு பேச்சு ஓடிட்டு இருந்துச்சு.
ஆனா அது உண்மையா? இங்கதான் ஒரு முக்கியமான விஷயமே இருக்கு. புது டெல்லியில நடந்த பிரிக்ஸ் மாநாட்டில இந்தியாவின் நிதித்துறை நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியா. இந்த பொது நாணயம் என்கிற யோசனையை ஒரு முட்டாள்தனம் அப்படின்னு ஒரே வார்த்தையில் நிராகரிச்சிட்டாரு. ஆமாங்க பிரிக்ஸ் பொது நாணயம் அப்படிங்கிறது இந்தியாவுக்கோ இல்ல மத்த வளரும் நாடுகளுக்கோ எந்த நன்மையும் தராது அப்படின்னு நம்ம கொள்கை வகுப்பாளர்கள் அடிச்சு சொல்றாங்க.
அப்போ என்னத்தான் செய்ய போறாங்க? புது நாணயத்தை கனவு காண்றதை விட நடைமுறைக்கு சாத்தியமான விஷயங்களில் கவனம் செலுத்த போறாங்க. நம்ம நாடுகளுக்குள்ள வரியில்லா வர்த்தகத்தை அதிகப்படுத்துறது, டெக்னாலஜி எரிசக்தி ஒருத்தர் கிட்ட இருந்து ஒருத்தர் கத்துக்கறதுதான் இப்போதைய திட்டம்.
ஒருநிமிஷம். எதுக்கு இந்த திடீர் மாற்றம்? அதுக்கு காரணம் அமெரிக்கா. அவங்களோட பாதுகாப்பு வாதம் அதாவது டாலர மீறி வேற நாணயத்தில் வர்த்தகம் செஞ்சா தடை விதிப்போம் அப்படின்னு மிரட்டுறதுதான் இந்த நாடுகளை ஒன்னு சேர்த்திருக்கு.
2026ல இந்த சக்தி வாய்ந்த பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நம்ம இந்தியாதான் தலைமை ஏற்க போகுது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு. வெறும் பேச்சோட நிக்காம குளோபல் சவுத்ன்னு சொல்லப்படுற வளர் நாடுகளோட உண்மையான குரலா பிரிக்ஸ் மாறும் அப்படின்னு இந்தியா நினைக்குது.
டாலரை முழுசா ஒழிக்கிறது நோக்கமல்ல. ஆனா டாலரை மட்டுமே சார்ந்திருப்பதை குறைக்க புது பேமெண்ட் சிஸ்டம் டிஜிட்டல் நாணயங்களை உருவாக்குறது டெக்னாலஜில தற்சார்பு அடையறதுதான் இவங்களோட அடுத்த கட்ட இலக்கு.
ஆர்டிபிசியல் ,இன்டெலிஜென்ஸ் குவாண்டம் கம்ப்யூட்டிங் அடுத்த தொழில் புரட்சிக்கு பிரிக்ஸ் நாடுகள் தயாராகிட்டு இருக்கு. சுருக்கமா சொன்னா பிரிக்ஸ் ஒரு பேச்சு போட்டியா இல்லாம உலக முடிவுகளை எடுக்கற இடத்துல தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க போகுது. அதுக்கு நம்ம இந்தியா தான் தலைமை தாங்கப் போகுது.






