
வரம்பற்ற தூரத்தை கொண்ட யாராலும் தாக்க முடியாத அணுசக்தி ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ராணுவ சீருடை அணிந்து வந்திருந்த புதின் பறக்கும் செர்னோவில் எனப்படும் புரவெஸ்னிக் அணுசக்தி ஏவுகனை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அறிவித்தார்.
இந்த சோதனையில் புரவெஸ்னிக் ஏவுகணை 15 மணி நேரம் தொடர்ந்து பறந்ததாகவும், 14000 கிலோமீட்டர் தூரத்தை கடந்ததாகவும் ,கூறப்படுகிறது.இந்த தூரம் மட்டுமே அதற்கு வரம்பு அல்ல என்றும், புதின் தெரிவித்தார். மேலும் யாராலும் கணிக்க முடியாத அளவிற்கும் தற்போதைய மற்றும் எதிர்கால ஏவுகனைகளாலும், புரவெஸ்னிக் ஏவுகனை பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
புரவெஸ்னிக் ஏவுகணையை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் புதிய தயாரிப்பான புரவெஸ்னிக் ஏவுகணை நாள் முழுவதும் காற்றில் சுற்றி தெரியும் என்பதும் ,தேவைப்பட்டால் அதன் இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இது கப்பல் ஏவுகணை என்பதால் எதிரி ரேடாரின் கண்டறியும் திறனுக்கு கீழே வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





