சாத்தூர் சோதனை சாவடி அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் நோக்கி சோலார் பேனல் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி கோவில்பட்டி சாத்தூர் சோதனை சாவடி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் பயணித்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்து. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே ஒரே நிறுவனத்தின் பேருந்துகள் மூலம் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே மாரிமுத்து என்பவர் பைக்கில் தனது மனைவி ஜோதி மீனாவுடன் சென்று கொண்டிருந்தபோது தனியார் பேருந்து ஒன்று பைக்கின் பக்கவாட்டில் இடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் ஜோதி மீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கணவர் மாரிமுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.








