Home தமிழகம் அறநிலைய துறை அமைச்சர் ஏன்? மாநகராட்சிக்குள்:

அறநிலைய துறை அமைச்சர் ஏன்? மாநகராட்சிக்குள்:

நான் பொறுத்துட்டே பாப்பேங்க எல்லாம் செய்யலனா ஒன்னும் இல்ல ஒரு டிராக்டர் குப்பைய கொண்டு வந்து உள்ள கொட்டிருவேன். நீங்கள் தனியார் வச்சு அள்ளிக்கீங்க இந்த பேச்சு வார்த்தை யாரிடம் நடக்கணும்? ஒன்னு மாநகராட்சி மேயர் தலையிடணும்.அடுத்து அந்த துறை அமைச்சர் வரணும்.அல்லது முதலமைச்சர்.

சேகர் பாபு ஏங்க பதில் சொல்றாரு? அவர் எந்த துறைக்கு அமைச்சர் அறநிலைய துறை அமைச்சர் அவர் ஏன் மாநகராட்சிக்குள்ள உட்கார்ந்துருக்காரு.

நம்ம யாருக்குமே கேள்வி கேட்க மாட்டோம்னு பேச்சு வார்த்தையா அவங்களுடைய முக பாவனையும் எவ்வளவு அலட்சியமா இருக்குது இதை விட போறதில்ல நீங்க துப்புரவு பணியாளர்கள் அதுவும் சமூக நீதிக்கு நாங்கதான். பெரியார் மண்ணுன்னு சொல்ற நீங்க.

இன்னைக்கு பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் இந்த இதில் வாழ்வாதாரமாக வைத்து கொண்டிருக்கிறார்கள். நீங்க அவங்க அவ்வளவு பேரையும் காவு கொடுக்கறீங்கங்கறது எப்படி தெரியாம போகுது? இன்னைக்கு அத்தனை மக்களும் உட்கார்ந்துருக்காங்க.

அவங்க ஒரு வாரமா ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்காங்க. ஆறுகட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து முறிவுக்கு வந்துவிட்டது. முதலமைச்சர் அவர்கள் இறங்கி கண்கொண்டு பார்க்க வேண்டும்.

என்கிட்ட கேட்டா தனியார் கிட்ட கொடுக்க போறேன்னு சொல்றாங்கல்ல. எல்லா குப்பையும் கொண்டு வந்து பில்டிங்ல கொட்டுங்க. தனியாரையே வச்சு நீங்க அள்ளிக்கீங்க. அள்றீங்களான்னு பார்க்றோம்.

என்னங்க இன்னும் ஒரு நாள் தோழர்கள் அத்தனை பேரும் உட்கார்ந்திருக்கறாங்க. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று அமர்ந்திருக்கிறார்கள். இந்த நீதி கிடைக்க வேண்டும்.

ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும். தனியார்களிடம் துப்புரவு பணி கொடுக்கப்பட கூடாது. இதை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.. பொறுத்துட்டே பாப்பேங்க. எல்லாம் செய்யலன்னா ஒன்னும் இல்ல. ஒரு டிராக்டர் குப்பைய கொண்டு வந்து உள்ள கொட்டிருவேன்.

நீங்கள தனியார வச்சு அள்ளிக்கீங்க சாமி. எல்லாமே தனியாரே பாத்துக்குவீங்களா? அப்புறதுக்கு நீங்க மேயரையும் வீட்டுக்கு அனுப்பிடுங்க.அதையும் தனியார வச்சு நிர்வாகம் பண்ணிக்கிடவேண்டியதுதான்.

மேயர் அவர்களும் முதலமைச்சர் அவர்களும் இந்த துறைக்கான அமைச்சர் நேரு அவர்களும் உடனடியாக இதை கவனத்தில் எடுக்க வேண்டும். ஏற்கனவே உங்ககிட்ட எல்லாம் இருக்கு அலட்சிய போக்கை கைவிட வேண்டும்.

போராட்டக்காரர்களை அலச்சியமாக விரட்டுவதும் ஊடக நண்பர்களை விரட்டுறாங்க. நீங்க பாத்துட்டு எல்லாரும் சும்மா இருக்கறீங்க. ஊடக நண்பர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

இல்லையென்றால் நாங்கள் அன்போடு இந்த ரிப்பன் பில்டிங்ல மாநகர ஆட்சி கட்டிடத்தில் குப்பையை கொண்டு வந்து கொட்டிட்டு அதையே தனியாரையோ கூப்பிட்டு அள்ளிக்க சொல்லிருவோம்.