சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை மறைமுகமாக அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ உள்ளிட்டோர் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் என் சதீஷ் குமார், டி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநிலம் முழுவதும் 713 கிராமங்களில் சீமை கருவேல மரங்களை அகற்றி உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் கிராமங்களின் பெயர் என்ன? எந்த மாவட்டம் எவ்வளவு மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்ற எந்த விவரங்களும் இல்லாமல் அறிக்கை உள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக தலைமை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.








