முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை வழங்கி வருகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் முன்னாள் படைவீரர்களுக்கு உதவக்கூடிய வகையிலான புதிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கின்றார்.
அதன்படி பொதுத்துறை சார்பில் முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்பாடு செய்தக்கூடிய விதமாக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த திட்டத்தை ஏற்கனவே முதலமைச்சர் சுதந்திர தினத்தின் பொழுது அறிவித்திருந்தார். அந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த திட்டத்தின் மூலமாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் உதவி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
தற்பொழுது வங்கிகள் மூலமாக அந்த ஒரு கோடி ரூபாய் கடன் உதவி பெறக்கூடிய விதமாக முன்னாள் படைவீரர்கள் செல்வதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து இந்த திட்டத்தின் பலன்களை வழங்கி வருகின்றார்.
அதன்படி இந்த முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் தொழில் தொடங்க வழங்கப்படக்கூடிய கடன் தொகையிலே 30% மூலதன மானியமாகவும் கடனுக்கான வட்டியில் 3% மானியமாகவும் வழங்கப்படும் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டிருக்கின்றார்கள்.
இந்த சுயதொழில் தொடங்க விரும்பக்கூடிய 55 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் பணியின்போது உயிர்நீத்த படைவீரர்களுடைய மனைவியர் ,மறுமணம் ஆகாத கைம்பெண்கள், முன்னாள் படைவீரரை சார்ந்திருக்கக்கூடிய திருமணம் ஆகாத மகள்கள் , கைம்பெண் மகள் ஆகியோர் முதலமைச்சருடைய காக்கும் கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.








