அதிமுக பாஜக கூட்டணி ஏற்படுவதற்கு முக்கிய இடையூராக இருந்தது அண்ணாமலை தான் என்று இதுவரை பேசப்பட்ட நிலையில் நெல்லையில் நடைபெற்று வரும் பூத் கமிட்டி மாநாட்டில் தமிழக பாஜக வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கியே தீர்வோம் .
அவரை முதலமைச்சராக்குவது பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான கடமை என்று முதன்முறையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பூத் கமிட்டி மாநாட்டில் பேசியிருக்கிறார். மிக முக்கிய திருப்பு முனையாக கருதப்படுகிறது
அதிமுக பாஜகா கூட்டணி ஏற்படுவதற்கு முன்னதாக அண்ணாமலையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் முதல் நிபந்தனையாக இருந்தது . என்றெல்லாம் அரசியல் ரீதியாக சர்ச்சையாக பேசப்பட்டது.
அண்ணாமலை நீக்கம் தொடர்பாக டூவிட்டர் பதிவு வெளியான பின்னரே உள்துறை அமைச்சர் அமிதஷாவை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் சென்றார் . என்றெல்லாம் அப்போது கூறப்பட்ட நிலையில். இன்று அதே உள்துறை அமைச்சர் அமிதஷா முன்னிலையில் இப்போது அதே அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கியே தீர்வோம்.
அவ்வாறு முதலமைச்சர் ஆக்குவது பாரதிய ஜனதா கட்சியின் கடமை என்று முதன்முறையாக அவர் கூறியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் உள்ள தலைவர்களில் முதன்முறையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த அளவுக்கு ஆதரவாக தமிழக பாஜக வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுகா பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி என்று நேற்று கூட நடிகர் விஜய் கூறியிருந்த நிலையில் இன்று அதிமுக பாஜக கூட்டணி இடையே மிக முக்கியமான ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலையின் பேச்சு நெல்லை தச்சநல்லூரில் நடைபெற்று வரக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் அண்ணாமலை இந்த அறிவிப்பை செய்திருக்கிறார்
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிச்சாமியை தமிழகத்தின் முதலமைச்சராக்கியே தீர வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியினர் அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும் என்றும் ,அதிமுக பாஜக கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமர வைப்பதற்கு அயராது பணியாற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்திருப்பது அதிமுக பாஜக கூட்டணி இடையேயான ஒருங்கிணைப்பில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாக கருத்தாக பார்க்கப்படுகிறது.
இந்த பாரதி ஜனதா கட்சியினுடைய எல்லா அன்பு தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி சொல்லி நம்முடைய கட்சிக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய உங்க அனைவருக்கும் இருக்கு.
இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பூத்து தலைவருக்கும் பூத்தில் இருக்கக்கூடிய பொறுப்பாளர்களுக்கும் அடுத்த எட்டு மாத காலம் கடுமையாக உழைத்து திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சியை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை இன்று நம்முடைய எதிர்கட்சி தலைவராக இருக்கக்கூடிய அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு தேசிய ஜனநாயக கூட்டணினுடைய ஒவ்வொரு தொண்டனுக்கும் இருக்கு.








