Home தமிழகம் ”ஆவடியில் பரபரப்பு” -நடு சாலையில் சாய்ந்த மின்கம்பங்கள் :

”ஆவடியில் பரபரப்பு” -நடு சாலையில் சாய்ந்த மின்கம்பங்கள் :

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தாழ்வாக சென்ற மின்கம்பி லாரியில் சிக்கியதில் மின்கம்பம் சாய்ந்திருக்கிறது.

ஆவடி மாநகராட்சி பின்புறம் 60 அடி சாலை உள்ளது. இதை ஒட்டி ஆவடி வீட்டு வசதி குடியிருப்பும் அமைந்துள்ளது.

இது பெரும்பாலும் வணிக வளாகங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. பிரபல துணிக்கடை செல்போன் கடைகள் அமைந்துள்ளன.

இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வது அதிக அளவில் காணப்படும். இந்த நிலையில் மிக தாழ்வாக சென்ற மின்கம்பின் மீது அவ்வழியே சென்ற தண்ணீர் லாரி ஒன்று சிக்கியுள்ளது.

இதில் அந்த மின்சார வயர்கள் பலமாக இழுக்கப்பட்டுள்ளது. இதனை அறியாத லாரி ஓட்டுனர் தொடர்ந்து லாரியை இயக்கியுள்ளார்.

இதனால் மின்கம்பி தாழ்வாக சென்றதால் லாரியில் சிக்கி இழுக்கவே அதன் மின்கம்பங்கள் சாய்ந்து நடு சாலையில் சரிந்துள்ளது.

இதில் அப்பகுதியில் சென்ற மக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக மின்கம்பம் சாய்வதை பார்த்த பொது மக்கள் அங்கிருந்து தப்பி ஒடமுயன்றனர். உடனடியாக சம்பவிடத்துக்கு விரைந்து வந்த ஆவடி போலீசார் லாரியை அங்கிருந்து பிடித்து பொதுமக்களுக்கு எந்த விபத்தும் ஆபத்தும் ஏற்படாதபடி அவர்களை பாதுகாத்தனர்.

உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த மின்சார துறையினர் கம்பங்களை சீர் செய்யும் பணியும், மின்சார வயர்களை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.