சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சியில் மது அருந்திவிட்டு அரசு அதிகாரிகளை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் ஊராட்சி செயலாளர் ஏழுமலையை பணியிடை நிக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 11 ஆம் தேதி இரவு ஊராட்சி செயலர் ஏழுமலையிடம் மது அருந்திவிட்டு ஊராட்சி அலுவலகத்திற்கு வருவது தவறு என்று சுட்டிக்காட்டிய அதிகாரி ராஜேஷை ஆபாச வார்த்தைகளால் திட்டியபடியே ஏழுமலை அடிக்க பாய்ந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரப்பப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







