Home தமிழகம் “சந்தோஷம் தரும் பண்டிகை – ஆனால் சுமை தரும் விலை உயர்வு!”

“சந்தோஷம் தரும் பண்டிகை – ஆனால் சுமை தரும் விலை உயர்வு!”

விநாயக சதுர்த்தியை ஒட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை கலைகட்டி உள்ளது. பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் விற்பனை கலைகட்டி உள்ளது. குறிப்பாக விநாயகர் சதுர்த்திர்த்திக்கு தேவையான அனைத்து பொருட்களுமே ஒரே இடத்தில் இருப்பதால் சென்னை மட்டுமல்லாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் மற்றும் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூஜை பொருட்களை இங்கு வாங்கி கொண்டு இருக்கின்றனர்.

குறிப்பாக பெரும்பாலான பொருட்கள் விலை ஏற்றம் அதிகமாக இருப்பதாக வரக்கூடிய பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பூக்களின் விலை அதிகமாக இருப்பதாகவும், சாமந்தி நேற்று 220 kg விற்பனைக்கு செய்யப்பட்டது இன்று ₹400 க்கும் அதேபோல மல்லி ₹900 ய்க்கும் விற்பனை செய்யப்பட்டது 1300 விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அருகம்புல் கட்டு ஒன்று ₹20 முதல் ₹80 க்கும், எருக்கம்புல் மாலை ₹ 60 முதல் ₹80 மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பகுதியில் சிறிய விநாயகர் முதல் பெரிய விநாயகர் குறைந்தபட்சம் ₹150லிருந்து அதிகபட்சமாக ₹1000 வரைக்கு பல்வேறு வண்ணங்களில் விதவிதமான விநாயகர் சிலைகளும் விற்பனை செய்யப்படுகிறது.