அமெரிக்காவில் தசை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல் சால்வடோரில் இருந்து அமெரிக்காவுக்கு திரும்பிய ஒரு நோயாளிக்கு தசை உண்ணும் புழுதொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை அறிவித்துள்ளது.
நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவர்ம் (NWS) என அழைக்கப்படும் இந்த தொற்று கால்நடைகளையே அதிகளவில் பாதிக்கும் என்றும் அரிதாக மனிதர்களை தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மேரிலாண்ட் சுகாதார துறையுடன் இணைந்து இந்த பாதிப்பை ஆய்வு செய்து வருகிறது.
இந்த அழிவுக்கு காரணமான ஒட்டுண்ணி பொதுவாக தென்ன அமெரிக்காவிலும் கரீபியன் பகுதிகளிலும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.








