திருச்சி அருகே பள்ளி வாகனம் மோதி ஐந்து வயது குழந்தை பலியாகி இருக்கிறது. சாலையோரம் சிறுநீர் கழிக்க சென்ற ஐந்து வயது குழந்தை மீது பள்ளி வாகனம் ஏறி இறங்கி இருக்கிறது.
திருச்சி முசிறி அருகே தனியார் பள்ளி வாகனம் ஏறி இறங்கியதில் தலை நசிங்கி ஐந்து வயது குழந்தை உயிரிழுந்திருக்கிறது. மாமரத்துப்பட்டி பட்டாயியம்மன் காமாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கிற்கு சென்ற நிலையில் இந்த விபத்தானது நிகழ்ந்திருக்கிறது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் மாரத்துப்பட்டி கிராமத்தில் பட்டாயி அம்மன் காமாட்சி அம்மன் கோவில் கும்பிஷேக விழா விமர்சியாக நடைபெற்று வந்தது.
கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் இதில் நாமக்கல் மாவட்டம் செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் குடும்பத்துடன் மற்றும் உறவினர்களுடன் கும்பிஷேக விழாவிற்கு தனது அஞ்சு வயதுபெண் குழந்தையுடன் வந்தனர்.
அப்பொழுது சாலையோரம் சிறுநீர் கழிக்கும் பொழுது அவ்வழியாக மாணவ மாணவிகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி வாகனம் பைரவி மீது மோதி தலை நசிங்கி சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்.
வெங்கடேசன் திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த ஒரே பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து தொட்டியம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பிஷேக விழாவில் ஐந்து வயது பெண் குழந்தை தலை நசிங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.








