தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமல் செல்போனில் மூழ்கி இருந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி அருகே உசிலம்பட்டி ஊராட்சி உட்பட்ட ஜி.உசிலம்பட்டி சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சியர் ராத் சிங் திடீர் ஆய்வு சென்றார். வாரியத்துறை பிரிவில் பொதுமக்கள் ஒருவர் கூட மனு கொடுக்க வரவில்லை என்பதால் அங்கிருந்த அதிகாரிகள் செல்போனில் பொழுது போக்கி கொண்டிருந்துள்ளனர்.
இதை அறிந்த ஆட்சியர் முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களா என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு இல்லை என்று அவர்கள் பதில் அளித்த நிலையில் அதிகாரிகளை கடிந்து கொண்டு அனைவரையும் பணிநீக்கம் செய்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்து புறப்பட்டார்








