சென்னை மடிப்பாக்கத்தில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகக்கவசம் உள்ளிட்டவை இல்லாமல் வேலை செய்யும் மாநகராட்சி ஊழியர்கள்.
பாதுகாப்பு கவசங்கள் கையுரைகள் முக கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடையில் இறங்கி பணி புரியும் நிலை தமிழ்நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
நீதிமன்றங்கள் மற்றும் அரசுக்கு இது குறித்து எச்சரிக்கைகள் விடுப்பட்ட போதிலும் இந்த மனித உரிமை மீரல் மற்றும் ஆபத்தான பணி நிலைமை, சென்னையில் தொடர்ந்து இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாகம் அதாவது பள்ளிக்கணையில் இருந்து வேளச்சேரி செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
பெருங்குடி மண்டலத்தில் இது போன்ற பல இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பு கவசம் இன்றி பணிப்புரிவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.








