தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்தும் மத்திய அரசு தரப்பில் இருந்தும் வெவ்வேற பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கு.
10ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள், பட்டம் முடித்தவர்கள் அதாவது பொறியியல் பட்டம் முடித்தவர்கள் இவர்களுக்கெல்லாம் இந்த வேலைவாய்ப்புக்கு தகுதி என்ற ஒரு நிலை இருக்கு.
சரி என்னென்ன பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருக்கு அப்படின்றத பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நோட்டிபிகேஷன்ஸ் என்னென்ன இருக்கு? யாரெல்லாம் தகுதி என்ற அந்த விவரங்களை போறோம்.
முதலாவதாக நாம பார்க்க போறது தமிழ்நாடு அரசு தரப்பில இருந்து 365 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கு. அதாவது ஒன்றிய நிலையில் இருக்கக்கூடிய பணியிடங்களுக்கான அறிவிப்பாக வெளியாக இருக்கு.
ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தனித்தனியாக இதற்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கு. அதாவது எவ்வளவு பணியிடங்கள் இருக்கு என்ற அந்த விவரங்கள் எல்லாம் தனித்தனியாக வெளியாகி இருக்கு. என்ன பணி அப்படின்னா ரெக்கார்ட் ரைட்டர் அதாவது ரெக்கார்ட் கிளர்க் அப்படின்னு சொல்லுவாங்க. பதிவரை எழுத்தர், ஜீப் ஓட்டுனர், அலுவலக உதவியாளர், ஆபீஸ் அசிஸ்டன்ட், நைட் வாட்ச்மேன். இந்த பணியிடங்களுக்குதான் அறிவிப்பு வெளியாகி இருக்கு.
இதற்கு கல்வி தகுதி பதிவரை எழுத்தருக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஜீப் ஓட்டுனராக இருந்தா எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. ஆனா ஐந்து ஆண்டுகள் ஓட்டுனராக பணியாற்றிய அனுபவம் தேவை.
அடுத்ததாக அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக சைக்கிள் ஓட்டு தெரிஞ்சிருக்கணும் குறிப்பிட்டுருக்காங்க.
இரவு காவலராக இருந்தா இதுதான் தகுதி கல்வி தகுதி அப்படின்னு எதுவும் குறிப்பிடல. ஆனா எழுதவும் படிக்கவும் தெரிஞ்சிருக்கணும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.
வயது வரம்பை பொறுத்தவரைக்கும் பொது பிரிவினராக இருந்தா குறைந்தபட்ச வயது 18 அதிகபட்சம் 32 வரைக்கும் பிசி ,பிசி முஸ்லிம் ,எம்பிசி இந்த பிரிவை பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு 18-ல் இருந்து வயது உச்சவரம்பு 34 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கு.
எஸ்சி ,எஸ்சிஏ, எஸ்டி இந்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கான வயது உச்சவரம்பு 37 இது எல்லா பணியிடங்களுக்கும் ஜிப் ஒட்டுனருக்கு மட்டும் இன்னும் கூடுதலான வயது வரம்பு எஸ்சி எஸ்சி எஸ்டி பிரிவுக்கு இருக்கு.
அதாவது 18ல இருந்து 42 வயது வரைக்கும் அவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கு. ஊதியத்தை பொறுத்தவரைக்கும் பதிவரை எழுத்தாராக இருந்தா 15,900-ல் இருந்து 58,500 வரைக்கும் ஊதியம் கிடைக்க வாய்ப்பிருக்கு.
ஜீப் ஓட்டனராக இருந்தா 19,500ல் இருந்து 71,900 வரைக்கும் ஊதியம் கிடைக்க வாய்ப்பிருக்கு. அலுவலக உதவியாளராக இருந்தா 15,700-ல் இருந்து 58,100 அளவுக்கு அதே ஊதியம் தான் இரவு காவலருக்கும் வழங்கப்படும் .
செலக்ஷன் ப்ராசஸ் என்ன அப்படின்னா இதற்கு குறிப்பிட்டு எழுத்து தேர்வு அப்படின்னு எதுவும் சொல்லப்படல ஆனா நேரடியாக என்ன பண்றீங்க உங்களுக்கு அந்த வேலை தெரியுமா அதற்கு நீங்க சரியான நபரா அப்படின்றத தெரிந்து கொள்ளும் வகையிலான நேர்காணல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்குனு எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப அவகாசத்தை பொறுத்தவரைக்கும் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கறதுக்கான இணையதளம் www.tnrd.tn.gov.in இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.








