Home தமிழகம் “இசைஞானி இளையராஜா – 50 ஆண்டு பொற்காலத்தை கொண்டாடும் சென்னை சிம்பொனி!”

“இசைஞானி இளையராஜா – 50 ஆண்டு பொற்காலத்தை கொண்டாடும் சென்னை சிம்பொனி!”

தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவிற்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடத்தப்படும் பாராட்டு விழாவில் சிம்பொனி
உள்ளீட்ட இசை நிகழ்வுகளை இளையராஜா நிகழ்த்த உள்ளார். அதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

தமிழக அரசு சார்பில் சிம்பொனியின் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா எனும் தலைப்பில் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் மதியத்திலிருந்தே தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை மாலை தொடங்கும் இந்த பாராட்டு விழாவானது மாலை 5:30 மணி அளவில் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதன் பின்னர் மாலை 6:30 மணி அளவில் இசைஞானி இளையராஜா அவர்களின் தலைமையில் உலகிலேயே தலைசிறந்த இசைக்குழு என்று கூறப்படும் ராயல் பில்கார் மூர்னிக் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் சிம்பொனி நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுருக்கின்றனர்.

02 மணி நேரம் 48 நிமிடம் நடக்கும் இந்த சிம்பொனிஅரங்கேற்றம் 80-க்கு மேற்பட்ட இசைக் கலைஞர்களை கொண்டு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

அரங்கேற்றம் முடிந்த பிறகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு உரையாற்ற இருக்கிறார். அதனை தொடர்ந்து இசைமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கி தலைமை உரை ஆற்றவும் இருக்கிறார்.

அதன் பின்னர் நடிகரும் எம்.பி-யுமான கமலஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர்கள் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.

நிகழ்ச்சி இறுதியாக இசையமைப்பாளர் இளையராஜா ஏற்புரை வழங்கவும் இருக்கிறார். இதனை முடித்த பிறகு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் நன்றி உரையாற்றவும் இருக்கிறார்.

இதற்காக ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக தற்பொழுது நடைபெற்று வரக்கூடிய நிலையில் லண்டனில் புகழ்பெற்ற இசை குழுவான ராயல் பின் கால் மார்னிங் ஆர்கெஸ்ட்ரா இசைக் குழுவினர் 80க்கும் மேற்பட்டோர் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு மதியத்திலிருந்து வர தொடங்கி இருக்கின்றனர்.

அதேபோல் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இளையராஜாவின் புகப்படங்கள் அடங்கிய பேனர்களும் வைக்கப்பட்டு தீவிரமாக அந்த ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா கடந்த மார்ச் மாதம் தான் லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். இதன் மூலம் வெளிநாட்டில் சிம்பொனி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் இளையராஜா அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

இதனை பாராட்டக்கூடிய வகையிலும் அதேபோல் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கக்கூடிய இளையராஜாவுக்கு இந்த பாராட்டை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.