Home தமிழகம் “சிக்கினாலும் பாதுகாப்பு – தமிழகம் உங்களுடன்!”

“சிக்கினாலும் பாதுகாப்பு – தமிழகம் உங்களுடன்!”

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையால் அங்கு சுற்றுலா மற்றும் இதர காரணங்களுக்காக சென்று வெளியேற இயலாமல் சிக்கி தவித்து வரும் தமிழர்களை மீட்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, அவர்களை மீட்டு வருவதற்கு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு துறை மற்றும் நேபாள நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை மீட்டுவர டெல்லி தமிழ்நாடு அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்றும் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 116 நபர்கள் பத்திரமாக இந்தியா திரும்பி உள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேபாளத்தில் சிக்கி தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும் நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தொலைபேசி 92895 16712 என்ற என்னும் tnhouse.in.gov.in மற்றும் பcoff tnh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.