Home தமிழகம் “மர்ம கும்பல் மிளகாய் பொடி தூவி 10 கிலோ தங்கம் பறிப்பு”

“மர்ம கும்பல் மிளகாய் பொடி தூவி 10 கிலோ தங்கம் பறிப்பு”

திருச்சி சிறுகனூர் அருகே தங்க வியாபாரியிடம் 10 கிலோ தங்க ஆபரண தங்கமானது கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல்லில் நகைகளை விற்பனை செய்துவிட்டு, மீதம் இருந்த 10 kg தங்கத்துடன் அவர் சென்னைக்கு பயணப்பட்ட பொழுது, மூன்று பேருடன் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, காரை வழிமறித்த மர்மகும்பல் மிளகாய் பொடியை தூவி, 10 kg தங்கத்தை கொள்ளையடித்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே நடைபெற்றிருக்கிறது. சென்னை சவுகார்பேட்டை ஆர்.கே ஜுவல்லரி மேலாளரிடம் இருந்து இந்த நகையானது கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அந்த பகுதியில் ஏற்படுத்தி இருக்கிறது.