Home தமிழகம் “பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் தேடப்படும் நபராக அறிவிப்பு”

“பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் தேடப்படும் நபராக அறிவிப்பு”

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரசன்ன சதுர்வேதி சாமியார் தலைமறைவாகி இருப்பதாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு தொழிலதிபரோட மனைவி மற்றும் மகளை கடத்தி பாலியல் அளித்த விவகாரம் தொடர்பாக சதுர்வேதி சாமியார் உட்பட ஏழு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் இந்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு நீதிமன்ற விசாரணைக்கு வந்து சதுர்வேதி சாமியார் அவர்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பலமுறை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில சம்மன் அனுப்பியும் சதுர்வேதி சாமியார் ஆஜராகாததால் தற்போது தேடப்படும் நபராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

சதுர்வேதி சாமியார் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருப்பதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வழக்கானது அல்லிகுளத்தில் இருக்கக்கூடிய மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரக்கூடிய நிலையில் தான் பலமுறை இவருக்கு சமன் அனுப்பியும் ஆஜர் ஆகதால் தற்போது தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.