திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை ஊர்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் மற்றும் கிரித்திகா தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு வயது குழந்தையானது இருந்திருக்கின்றன .
அந்த குழந்தையின் பெயர் புனிஷ் இந்த குழந்தைக்கு நேற்று அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசியானது போடப்பட்டிருக்கின்றன இரண்டு வயதுக்குரிய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நேற்று அங்கன்வாடியில் போடப்பட்டிருக்கின்றன.
குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு குழந்தை இரவு நன்றாக தூங்கி இருக்கின்றன காலையில் பார்க்கும்போது குழந்தை கண்விழிக்கவில்லை ஆகவே அவருடைய பெற்றோர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றிருக்கின்றனர்
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர் உடனே மருத்துவ துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர் காவல்துறை குழந்தையை மீட்டு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்
ஆனால் உறவினர்கள் குழந்தையை தங்களிடம் கொடுங்கள் என்று கேட்டும், அதுமட்டுமில்லாமல் குழந்தை எவ்வாறு இறந்தது என்று எங்களுக்கு தெரியவேண்டு என்று வாணியம்பாடியிலேயே அவர்கள் கத்தி கூச்சலிட்டு இருக்கின்றனர்.
ஆனால் ஆம்புலன் குழந்தையை ஏற்றி சென்றபோது பின்தொடர்ந்த பெற்றோர்கள் வாகனத்தில் ஆம்புலன்சை துரத்தி வந்திருக்கின்றனர் மேலும் 80 கிலோமீட்டர் தொலைவிற்கு மேலாக ஆம்புலன்சை பின்தொடர்ந்து வந்து வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்சை முற்றுகையிட்டு உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது குழந்தைக்கு அங்கன்வாடி மையத்தில் ஊசி போட்டதாலே தனது குழந்தை இறந்திருக்கின்றன. இந்த இறப்பிற்கு உரிய நீதி வேண்டும். எங்கள் குழந்தையை தங்களிடம் கொடுங்கள் என்று அந்த பகுதியில் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு வந்த வேலூர் வாணியம்பாடி காவல் துறையினர் உறவினர்களும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தையை பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே குழந்தை எவ்வாறு இறந்தது என்று நமக்கு தெரியவரும். ஆகவே குழந்தையை பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுமதியுங்கள் என்று காவல் துறையினர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர்
தற்போது பேச்சுவார்த்தையின் படி குழந்தையை பிரேத பரிசோதனைக்கு கொடுப்பதற்காக பெற்றோர்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவலானது வெளியாகி இருக்கின்றன இந்த சம்பவத்தால் அடுக்கம்பாறை பகுதியில் சிறிது நேரம் போக்குவரப்பு பாதிக்கப்பட்டன மேலும் குழந்தை இறந்திருக்கக்கூடிய சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது







